Latestமலேசியா

ஜோகூர் கேலாங் பாத்தா R&R-இல் தீப்பிடித்து எரிந்த தொழிற்சாலை பேருந்து

ஜோகூர் கேலாங் பாத்தா R&R-இல் தீப்பிடித்து எரிந்த தொழிற்சாலை பேருந்து

ஜோகூர், பிப்ரவரி 9

மலேசியா–சிங்கப்பூர் இரண்டாவது இணைப்புச் சாலையின் தெற்குத் திசையில் உள்ள கேலாங் பாத்தா ஓய்வு மற்றும் சேவை மையமான R&R பகுதியில், இன்று அதிகாலை ஒரு தொழிற்சாலை பேருந்து தீப்பிடித்து எரிந்தது. அப்பேருந்து பகுதியளவில் சேதமடைந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால், எவ்வித உயிரிழப்பு சம்பவங்களோ தீக்காயங்களோ ஏற்படவில்லை என்றும் இந்த சம்பவம் Kampung Tiram Duku Kiri அருகே நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றவுடனேயே வெறும் 10 நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்து, தீயை மிக விரைவில் கட்டுப்படுத்தினர் என்று மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்தில் பேருந்து சுமார் 65 விழுக்காடு சேதமடைந்ததாகவும், குறிப்பாக என்ஜின் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு குழு சம்பவ இடத்திற்கு வந்தபோது, பேருந்து ஓட்டுநர் அங்கு இல்லாததாகவும் கூறப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!