Latestஉலகம்மலேசியா

டிக்கெட் & கடப்பிதழின்றி விமானத்தில் பயணம் செய்த 2 புறா பயணிகளால் களவரம்; 2 மணிநேரம் தாமதமான Delta Air விமானம்

வாஷிங்டன், மே-29- அமெரிக்காவின் மினசோட்டா (Minnesota) மாநிலத்தில் 2 புறாக்கள் விமானத்திள் புகுந்து ‘அட்டகாசம்’ செய்ததால், Delta Air Lines விமானத்தின் புறப்பாடு 2 முறை தடங்கலானது.

Minneapolis-Saint அனைத்துலக விமான நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

விஸ்கான்சின் (Wisconsin) மாநிலத்துக்கு புறப்படத் தயாரான போது முதல் புறா திடீரென விமானத்திள் புகுந்தது.

இதனால் ஓடுபாதையிலிருந்து விமானம் புறப்பட்ட இடத்திற்கேத் திரும்பியது.

அங்கு விமானப் பணியாளர் ஒருவர் அதனைப் பிடித்து வெளியே விட்டார்.

விமானம் மீண்டும் புறப்படத் தயாரான போது மற்றொரு புறா உள்ளே புகுந்து விட்டது.

இதனால் இரண்டாவது முறையாக, அதே இடத்திற்று விமானம் திரும்ப, மற்றொரு பணியாளர் அந்தப் புறாவைப் பிடித்து வெளியே விட்டார்.

இரு புறாக்களின் ‘வருகையால்’ 119 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களை ஏற்றியிருந்த அவ்விமானம், 56 நிமிடங்கள் தாமதமாகவே இலக்கு நோக்கி புறப்பட்டது.

இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு Delta Air Lines வருத்தம் தெரிவித்தது.

விமானத்தினுள் பணியாளர் புறாவைப் பிடிக்கும் காட்சி வைரலாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!