
ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 7 – கடந்த திங்கட்கிழமை, பண்டார் பாரு பெர்மாஸ் ஜெயாவிலுள்ள உணவு வளாகம் ஒன்றில் ஜோகூர் பாரு குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில் பெர்மிட் இல்லாத 27 வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உளவுத்துறை மற்றும் பொது தகவல்களின் அடிப்படையில் மேற்கொண்ட இச்சோதனையில் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த 25 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர் என்று ஜோகூர் குடிநுழைவுத்துறை இயக்குனர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் தரஸ் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் 8 ஆண்களும் 8 பெண்களும் இந்தோனேசியாவைச் சார்ந்தவர்கள் என்றும் 5 ஆண்களும் 6 பெண்களும் மியான்மாரைச் சார்ந்தவர்கள் என்றும் அறியப்படுகின்றது.
கைதானவர்கள் அனைவரும் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் வெளிநாட்டினருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக அந்த வளாகத்தின் உரிமையாளரையும் போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.