Latestமலேசியா

ஜோகூர் பாருவில் மோட்டார் சைக்கிளோட்டியை இன்னொரு மோட்டார் சைக்கிளோட்டி தாக்கியச் சம்பவம் விசாரிக்கப்படுகிறது

ஜோகூர் பாரு, மார்ச்-25 – ஜோகூர் பாருவில் சாலை சமிக்ஞை விளக்குச் சந்திப்பில் தவறான புரிதலால் இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் இடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பில், போலீஸ் விசாரணைத் தொடங்கியுள்ளது.

ஜாலான் தம்போய் – ஜாலான் பெர்சியாரான் தஞ்சோங் சாலைச் சந்திப்பில் ஞாயிறு மாலை 4 மணிக்கு மேல் அச்சம்பவம் நிகழ்ந்தது.

பாதிக்கப்பட்ட நபரான 29 வயது உள்ளூர் ஆடவர் அது குறித்து போலீஸில் புகார் செய்திருப்பதை, வட ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் துணை ஆணையர் பல்வீர் சிங் மஹிந்தர் சிங் உறுதிப்படுத்தினார்.

அங்கு மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த தம்மை, பக்கத்தில் வந்து நின்ற ஆடவர் ஏசியதோடு, தம்மை சரமாரியாகத் தலையில் தாக்கியதாக புகார்தாரர் கூறினார்.

குறைந்தது 6 முறை தலையில் தாக்கி விட்டு, பச்சை விளக்கு மாறியதும் அந்நபர் கிளம்பிச் சென்ற 23 வினாடி முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக சந்தேக நபர் தேடப்படுகிறார்.

தகவல் தெரிந்த பொது மக்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புகொள்ளுமாறு பல்வீர் சிங் கேட்டுக் கொண்டார்.

சாலைகளில் சட்டத்தைக் கையில் எடுத்துகொள்ள வேண்டாம்; எதுவாக இருந்தாலும் முதலில் அதிகாரத் தரப்பை நாடுமாறும் அவர் பொது மக்களை அறிவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!