
ஜோகூர் பாரு, ஏப் 5 – ஜோகூர் பாரு, Jalan Austin Heightsசில் ஒரு விளையாட்டு மையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் தனியாக இருந்த ஆடவரை , பேஸ்பால் (Baseball) மட்டைகளாலும் இரும்பு கம்பிகளாலும் ஆயுதம் ஏந்திய சுமார் 20 பேர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதிகாலை 1.30 மணியளவில் நடந்த அந்த தாக்குதலில், வாகனத்தின் கண்ணாடி உடைந்ததில், நான்கு சக்கர வாகனத்தில் இருந்த 20 வயது நபருக்கு வலது முழங்கை மற்றும் இடது உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது.
உணவு விற்பனை நிலையத்திற்கு அருகில் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு பின்னர் வன்முறையாக மாறியதாக தென் ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ரவ்ப் செலமாட் ( Raub Selamat ) தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேக நபர்களையும் போலீசார் தீவிரமாகக் தேடி வருகின்றனர்.
ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது அவையிரண்டும் விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 427 ஆவது பிரிவின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் ஆபத்தான ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றவியல் சட்டத்தின் 148 ஆவது பிரிவின் கீழும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.