
ஜோகூர் பாரு, ஜனவரி-16, கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையமான PUSPAKOM-மின் பணியாளரை, வாடிக்கையாளர் கன்னத்தில் அறையும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
PUSPAKOM-மின் ஜோகூர் பாரு கிளையில் நேற்று அச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
பரிசோதனைக்கு அனுப்பிய தனது லாரி தொழில்நுட்ப விதிமுறைகளைப் பூர்த்திச் செய்யவில்லையென தெரிவிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்து, அந்த ஆடவர் PUSPAKOM பணியாளரின் கன்னத்தில் அறைந்தார்.
மஞ்சள் நிற சட்டை அணிந்திருந்த முதியவரான அந்த வாடிக்கையாளர், முதலில் அப்பணியாளரை அழைத்து ஏதோ ஒரு தாளை நீட்டுவது CCTV கேமரா பதிவில் தெரிகிறது.
அது, வாகன பரிசோதனையின் முடிவுகள் அடங்கிய தாளாக இருக்கலாமென நம்பப்படுகிறது.
கண்ணிமைக்கும் நேரத்தில் பணியாளரின் கன்னதில் அம்முதியவர் சட்டென அறைந்ததால், அங்கு பதற்றமேற்பட்டது.
வைரல் வீடியோ குறித்து போலீஸ் அல்லது PUSPAKOMO சார்பில் இன்னும் அறிக்கையேதும் வெளியாகவில்லை.