
டாமான்சாரா, அக்டோபர்-12, சிலாங்கூர் டாமான்சாராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் 14-வது மாடியிலுள்ள வீட்டில் ஏற்பட்ட தீயில், ஒரு பெண் பலியானார்.
தீ பரவிய போது குளியறையில் சிக்கிக் கொண்ட 31 வயது பெண்ணின் உடலை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
இன்று காலை 8 மணிக்கு ஏற்பட்ட அத்தீயில் ஒரு பெண் ஓர் ஆண் என மேலுமிருவர் காப்பாற்றப்பட்டனர்.
அவ்வீட்டின் switch box விசைப்பலகையிலிருந்து தீ பரவியது கண்டறியப்பட்டது.