
ஜோர்ஜ்டவுன், மார்ச்-17 – பினாங்கு, ஜோர்ஜ்டவுன், ஜாலான் பத்தாணியில் 3 கடைகளில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில், தொண்டூழியத் தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார்.
நேற்றைய அச்சம்பவத்தில் இன்னொரு வீரருக்கு கால் எலும்பு முறிந்தது.
இருவரும் சிகிச்சைக்காக உடனடியாக பினாங்கு பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தீயில் பாதிக்கப்பட்ட 3 வளாகங்கள் முறையே கரைப்பான் எனப்படும் ஒரு thinner தொழிற்சாலை, ஒரு உலோக வேலைப்பாடு கடை மற்றும் ஒரு திருமண மேலாண்மை நிறுவனமாகும்.
தீயை அணைக்க சுமார் 1 மணி நேரம் பிடித்ததாக, பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.
தீயில் 80 விழுக்காடு சேதம் ஏற்பட்ட நிலையில், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
அதில், 33 வயது வங்காளதேசத் தொழிலாளி நூலிழையில் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.