Latestமலேசியா

டத்தாரான் மெர்டேக்காவில் வியாபாரம் செய்யத் தடை; DBKL அறிவிப்பு

டத்தாரான் மெர்டேக்காவில் வியாபாரம் செய்யத் தடை; DBKL அறிவிப்பு

கோலாலாம்பூர், பிப்ரவரி-19,

டத்தாரான் மெர்டேக்கா பகுதியில் வியாபாரம் செய்வது முற்றிலும் தடைச் செய்யப்பட்டுள்ளதை, கோலாலாம்பூர் மாநகர மன்றமான DBKL நினைவுறுத்தியுள்ளது.

இத்தடை மாநகரின் பாரம்பரிய மதிப்பு, தூய்மை மற்றும் அதன் பெருமையை காக்கும் நோக்கத்தைக் கொண்டதாக, தனது ஃபேஸ்புக் பதிவில் அது குறிப்பிட்டது.

டத்தாரான் மெர்டேக்கா, கோலாலம்பூரின் அடையாளங்களில் ஒன்றாகவும் சுற்றுலாத் தலமாகவும் இருப்பதால், அதன் அழகும், சுத்தமும் காக்கப்பட வேண்டும் என DBKL கூறியது.

அண்மையில் அங்கு ‘Air Balang’ போன்ற பானங்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டு, சட்டப்பூர்வ முறையில் அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அது சமூக ஊடகங்களில் சர்ச்சையான நிலையில், இவ்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது மக்கள் அங்கு அனுமதியின்றி விற்பனை செய்யும் வியாபாரிகளிடமிருந்து பொருட்கள் வாங்காமல், அப்பகுதியின் சுத்தத்தையும் அழகையும் பராமரிக்க உதவ வேண்டும் என DBKL கேட்டுக்கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!