
கோலாலம்பூர், ஜூலை-19-
அண்மையில் காலமான ம.இ.கா முன்னாள் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேலுக்கு, ம.இ.கா மத்திய செயலவைக் கூட்டம் நேற்று இரங்கல் தெரிவித்தது.
தேசியத் தலைவர் தான் ஸ்ரீ SA விக்னேஸ்வரன் தலைமையில் ம.இ.கா தலைமையகக் கட்டடத்தில் நேற்று மத்திய செயலவைக் கூட்டம் நடைபெற்றது.
ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், தேசிய உதவித் தலைவர்கள், மகளிர் – இளைஞர் பிரிவுத் தலைவர்கள் உள்ளிட்ட மத்திய செயலவை உறுப்பினர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டனர்.
கூட்டம் தொடங்கும் முன், பழனிவேலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ம.இ.கா சாதனைத் தலைவர் துன் சாமி வேலுவுக்கு பிறகு கட்சியின் 8-ஆவது தேசியத் தலைவராகப் பொறுப்பேற்று வழிநடத்தியவர் பழனிவேல்.
சுற்றுச்சூழல் இயற்கை வளத்துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த பழனிவேல், ஜூன் 17-ஆம் தேதி தனது 76 வயதில் காலமானார்.