Latestமலேசியா

டாங் வாங்கி முன்னாள் OCPD-யை காயப்படுத்திய வழக்கில் 16 வயது பையன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்

கோலாலம்பூர், ஜனவரி-2, கம்போங் சுங்கை பாரு பிரச்னையின் போது அப்போதைய டாங் வாங்கி போலீஸ் தலைவர் ACP Sulizmie Affendy Sulaiman-னைக் கல்லால் அடித்து காயப்படுத்தியதை, 16 வயது பையன் கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளான்.

இச்சம்பவம் கடந்தாண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி, கம்போங் சுங்கை பாரு பகுதியில் வீடுகளை காலி செய்யும் நடவடிக்கையின் போது நிகழ்ந்தது.

அப்போது கடமையில் இருந்த அரசுப் பணியாளருக்கு காயம் விளைவித்ததாக, அப்பையன் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டிருந்தது.

நீதிமன்றம் அவனுக்கு 500 ரிங்கிட் ஜாமீன் வழங்கி, தண்டனை வழங்கும் முன் அவனது ஒழுக்க அறிக்கையை சமர்ப்பிக்க அதிகாரிகளை உத்தரவிட்டது.

இவ்வேளையில், அதே சம்பவம் தொடர்பில் சட்டவிரோத கூட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 6 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

ஒருவர் மறுத்து விசாரணைக் கோரினார்.

இந்த வழக்கு வரும் பிப்ரவரியில் மறுசெவிமெடுப்புக்கு வருமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!