
கோலாலம்பூர் அக்டோபர் 2 – பிளாசா டோல் டாமான்சாரா அருகே சந்தேகத்திற்குரிய வகையில் காணப்பட்ட MPV வாகனத்தை போலீசார் சோதனை செய்தபோது, சுமார் 3.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 150 கிலோ ‘ஷாபு’ (syabu) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை, லெபூராயா பாரு லெம்பா கிள்ளான் நெடுஞ்சாலையின் (NKVE) 18 வது கிலோ மீட்டரில் தெற்கு திசையில் காவல்துறையின் ரோந்து அணியினர், அந்த MPV வாகனத்தை நிறுத்துமாறு உத்தரவிட்ட போது அந்த ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தாமல் தப்பி செல்ல முயற்சித்தார் என்று புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் (JSPT) இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹாசான் பஸ்ரி (Datuk Seri Mohd Yusri Hassan Basri) தெரிவித்தார்.
பின்னர் அந்த ஓட்டுனர் டோல் கதவை மோதி விட்டு வலது பாதையில் வாகனத்திலிருந்து இறங்கி ஓடி சென்று விட்டார் என்று அவர் கூறினார்.
வாகனத்தைச் சோதித்தபோது, 6 மூட்டைகளில் 150 எடையிலானா ‘syabu ’ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட எம்பிவி வாகனம் மற்றும் போதைப்பொருட்கள், பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையக போதைப்பொருள் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்பு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
போலீசார் தப்பிச் சென்ற சந்தேகநபரைத் தேடிவருகின்ற நிலையில் கூடுதல் தகவல் தெரிந்தவர்கள் போலீசாரை உடனடியாக அணுக வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டனர்.