
ஷா ஆலாம், மார்ச்-11 – டிக் டோக்கில் குண்டர் கும்பலை விளம்பரப்படுத்தியதன் வினையாக, 6 ஆடவர்கள் சிலாங்கூரின் பல்வேறு மாவட்டங்களில் கைதாகியுள்ளனர்.
உளவுப் பார்த்து கடந்த வாரம் நடத்திய அச்சோதனைகளில், 20 முதல் 40 வயதிலான அந்த அறுவரும் கைதானதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் கூறினார்.
கோம்பாக்கில் கைதான ஆடவர் போதைப்பொருள் உட்பட 12 குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பது அம்பலமானது.
6 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டதில், காஜாங்கில் கைதான நபர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு விட்டது.
எஞ்சிய ஐவர் மீதும் விசாரணைத் தொடருவதாக டத்தோ ஹுசேய்ன் சொன்னார்.
எந்தத் தளமாயினும், குண்டர் கும்பல் கலாச்சாரத்தைப் பரப்பும் தரப்பினரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது தொடருமென்றார் அவர்.
சட்ட நடவடிக்கையாக மட்டுமல்லாமல், விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இச்சோதனைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
காரணம், கைதானவர்களில் சிலர், குண்டர் கும்பலை விளம்பரப்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றோ கைதுச் செய்யப்படுவோம் என்றோ அறிந்திருக்கவில்லை என டத்தோ ஹுசேய்ன் ஓமார் கூறினார்.