
பாச்சோக், ஏப்ரல்-16, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை இழிவுப்படுத்தும் வகையில் டிக் டோக்கில் வீடியோ வெளியிட்ட குற்றத்திற்காக, 25 வயது இளைஞருக்கு 4,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் கிளந்தான், பாச்சோக் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட அக்குற்றச்சாட்டை அந்நபர் ஒப்புக் கொண்டார்.
பிரதமரின் பாச்சோக் வருகையைப் புறக்கணிக்குமாறு மக்களைத் தூண்டியதோடு, இழிவான புனைப்பெயர்கள் வைத்தும் அவரை அழைத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை பந்தாய் இராமாவில் நடைபெற்ற மடானி நோன்புப் பெருநாள் உபசரிப்பில் பிரதமர் பங்கேற்றது ‘மக்களை ஏமாற்றும் முயற்சியே’ என அவ்விளைஞர் அவதூறாக வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்நபரின் கைப்பேசியில் ஆபாச வீடியோக்களும் புகைப்படங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அது தனியாக, மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையத்தின் விசாரணையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.