புத்ரா ஜெயா, நவம்பர் 27 – மலேசிய இந்தியச் சமூக உருமாற்ற பிரிவான மித்ராவின் மானியத்திற்கு அடுத்த மாதம் தொடங்கி விண்ணப்பிக்கலாம்.
இதற்கான போர்ட்டல் டிசம்பர் 2ஆம் திகதி முதல் ஜனவரி 5ஆம் திகதி வரை திறந்திருக்கும் என்று மித்ராவின் சிறப்புப் பணிக்குழுவின் தலைவர் பி.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தைப் போலவே மித்ரா நிதிக்கு அரசு சாரா இயக்கங்களும், தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கும் விண்ணப்பிக்கலாம் என அவர் கூறினார்.
இவ்வேளையில், உயர்கல்வி பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கும் சிறுநீரக நோயாளிகளுக்கும் இவ்வாண்டு இறுதிக்குள் நிதி வழங்கப்படும் எனப் பிரபாகரன் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதற்கான விண்ணப்பங்கள் பரிசீலித்து அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் அந்நிதி முறையாக வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
யார் யாருக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது என்ற பெயர் பட்டியலை மித்ரா அகப்பக்கத்தின் வாயிலாக அறிந்து கொள்ள இயலும் என்பதை இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மித்ரா ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி விருந்து நிகழ்ச்சிக்குப் பின் அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.