
கோலாலம்பூர், அக்டோபர் -27,
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், ஆசியான் 47வது உச்ச மாநாட்டில் பங்கேற்று இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டுள்ள நிலையில் மலேசியாவை சிறந்த மற்றும் ஆற்றல்மிக்க நாடு என்று கூறி பாராட்டியுள்ளார்.
டிரம்பின் இந்த இரண்டு நாள் பயணத்தின் போது, அமெரிக்கா, மலேசியாவுடன் முக்கிய வர்த்தக மற்றும் அரிதான கனிம ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான “கோலாலம்பூர் சமாதான ஒப்பந்தம்” கையெழுத்தாகியதை நேரில் கண்டது பெருமை எனவும், இனி போர் இல்லை, கோடிக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று காலை 10 மணிக்கு மலேசியா வந்தடைந்த அமரிக்க அதிபர் இன்று ஜப்பான் நோக்கி புறப்பட்டார். டிரம்ப், மலேசியாவை பார்வையிட்ட மூன்றாவது அமெரிக்க அதிபராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் என்றும் அவருக்கு முன்னதாக லிண்டன் பி. ஜான்சன் மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் வருகைப்புரிந்தனர் என்றும் குறிப்பிடத்தக்கது.



