கோலாலம்பூர், நவ 18 – கோலாலம்பூர் டேசா பண்டானில் மரம் ஒன்று கார் மீது விழுந்ததில் அக்கார் மிகவும் மோசமாக சேதம் அடைந்தது. எனினும் இந்த சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லையென கோலாலம்பூர் மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தது. வர்த்தக பகுதியில் மரம் விழுந்ததில் பரபரப்பான அந்த சாலையையும் மூடப்பட்டது. மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் மலேசிய பொது தற்காப்பு படையினரின் உதவியோடு கோலாலம்பூர் மாநகர் மன்ற பணியாளர்கள் ஈடுபட்டனர்.