தோக்யோ, அக்டோபர்-12, உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய கார்டூன் டோரேமோன் (Doraemon) தொடரின் முதன்மைக் கதாபாத்திரத்திற்குப் பின்னணி குரல் கொடுத்தவரான நோபுயோ ஒயாமா (Nobuyo Oyama) 90 வயதில் காலமானார்.
ஏற்கனவே குடல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர், வயது மூப்புகாரணமாக தோக்யோவில் மரணமடைந்தார்.
நடிப்புக் கல்லூரியில் பயிற்சியை முடித்ததிலிருந்து பின்னணி குரல் கலைஞராக மாறிய ஒயாமா, கால் நூற்றாண்டுக்கும் மேலாக டோரேமோனின் ஜப்பானியக் குரலாக வலம் வந்தார்.
உலகம் முழுவதுமுள்ள சிறார்களின் செல்ல கதாபாத்திரமாக டோரேமோன் மாறுவதற்கு, ஒயாமாவின் குரலும் பெரும் பலமாகத் திகழ்ந்துள்ளது என்றால் மிகையில்லை.