
ஜகார்த்தா, அக்டோபர்-5,
இந்தோனேசியா, மேற்கு சுமத்ராவில் தங்கும் வசதியுடன் கூடிய சமயப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது.
பலியானவர்களில் பெரும்பாலோர் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட ஆண் மாணவர்கள் ஆவர்.
இதுவரை 104 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ஒரு வாரமாகியுள்ள நிலையில் இன்னமும் 26 பேரைக் காணவில்லை.
மீட்புப் பணியாளர்கள், மோப்ப நாய்கள் மற்றும் மண்வாரி இயந்திரங்களின் உதவியுடன் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க போராடி வருகின்றனர்.
இச்சம்பவம் மாணவர்கள் மாலை தொழுகைக்கு கூடும் நேரத்தில் நிகழ்ந்தது.
கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததால், அருகிலுள்ள வீடுகளும் அதிர்ந்தன.
கட்டுமானத்தில் கோளாறு மற்றும் பராமரிப்பு குறைபாடு காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
மீட்புப் பணி முடிந்ததும் முழு விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.