
தாய்லாந்து, டிசம்பர் 9 – தாய்லாந்து, தனது எல்லைக்குள் நுழைந்த கம்போடியா படைகளை வெளியேற்றுவதற்கு இராணுவ நடவடிக்கை எடுத்துள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.
இதனால், இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக நீடித்து வரும் எல்லை பிரச்சனை தற்போது மீண்டும் வெடித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் இரண்டு கம்போடியா நாட்டவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து மொத்தம் 6 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் தாய்லாந்தில் ஒரு ராணுவ வீரர் பாலியகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதம், அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட செய்து இரு நாட்டுக்குமிடையேயான மோதலை நிறுத்தியிருந்தார்.
போரின் காரணமாக தாய்லாந்தில் 4 லட்சம் மக்களும், கம்போடியாவில் பல ஆயிரம் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த எல்லை பிரச்சனை நூற்றாண்டுகளாக நீடித்து வருவதோடு.பழமையான கோவில்களின் உரிமை குறித்து இரு நாடுகளும் தொடர்ந்து வாதிப்பதால், அடிக்கடி பதற்றமும் எழுந்து வருகிறது.



