Latestமலேசியா

தகமை விருது விழா: தமிழ்க் கல்வியாளர்களைச் சிறப்பிக்கும் சீரிய முயற்சி

பெட்டாலிங் ஜெயா, மார்ச-20-நாட்டில் முதன் முறையாக தமிழ்க் கல்வியாளர்களை கௌரவிக்கும் வகையில் விருது விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TAGAMAI (தமிழ்க் கல்வி ஆளுமை) இயக்கம், இந்த தமிழ்க் கல்வி விருதளிப்பு விழாவை வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி நடத்துகிறது.

பேராசிரியர் டத்தோ Dr என்.எஸ்.ராஜேந்திரன், முனைவர் நாகலிங்கம், முனைவர் என். தர்மலிங்கம், முனைவர் மலர்விழி சின்னையா உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த விழாவின் முக்கிய நோக்கமே, மலேசியாவில் தமிழ்க் கல்வி மற்றும் தமிழ்மொழிக்காக பணியாற்றிய கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் தமிழ்த் தொண்டர்களை கௌரவிப்பதாகும்.

தன்னார்வ அடிப்படையில் நடத்தப்படும் இம்முயற்சியின் முக்கிய அம்சங்கள் குறித்து, விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

கலைஞர்களுக்கு வழங்கப்படும் பாராட்டைப் போல கல்வியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என, விழாக் குழு செயலாளர் C.M. திரவியம் தெரிவித்தார்.

சிறந்த தலைமையாசிரியர், சிறந்த தமிழ்மொழி ஆசிரியர், சிறந்த இடைநிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர், வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.

ஒவ்வொரு விருதுக்கும் பதக்கம், சான்றிதழ் மற்றும் பணப்பரிசு வழங்கப்படும்.

மாணவர் சேர்க்கை சரிவையும், பெற்றோரின் எதிர்மறை கருத்துகளையும் மாற்றி, தமிழ்ப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதும் இந்த முயற்சியின் நோக்கமாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!