
தாங்கக் அக்டோபர் 25 – நேற்றிரவு முவார் செகாமட் (Jalan Muar–Segamat) சாலையின் 32.5 வது கிலோமீட்டரில் நிகழ்ந்த கோர விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்.
மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு பெரோடுவா மைவி (Perodua Myvi) கார் விபத்துக்குள்ளானதில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்போதே உயிரிழந்தார் என்று தங்காக் மாவட்ட காவல் தலைமை அதிகாரி ரொஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்தார்.
இந்த விபத்தில் பெரோடுவா மைவி காரின் ஓட்டுநரும் அதிலிருந்த பயணியும் எந்தக் காயங்களுமின்றி உயிர் தப்பினர்.
சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் வபதிவு செய்யப்பட்ட இந்த விபத்தின் காரணம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மேலும் விபத்துக்கான காணொளிகள் அல்லது படங்களை பகிர வேண்டாமென்று போலீசார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் உடனடியாக போலீசாரை அணுக வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது.



