
ஜகார்த்தா, செப்டம்பர் 2 – ஜகார்த்தாவில் இருக்கும் பெண்ணொருவர், குளத்தில் தனது வளையலைத் தொலைத்து விட்டு, பின்பு அவ்வளையலை மீட்டெடுப்பதற்காக அந்த குளத்து நீரை வற்ற செய்த சம்பவம் சமூக ஊடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வறண்ட குளத்தைச் சுற்றி பலர் வளையலைத் தேடுவதற்காக அலைந்து கொண்டிருக்கும் காட்சி சமூக ஊடகத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
சில மணி நேர தேடுதலுக்குப் பின்பு அவ்வளையல் மீண்டும் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வலைத்தளத்தில் பரவி வரும் அக்காணொளியின் கீழ் நெட்டிசன்கள் பலதரப்பட்ட எதிர்மறை கருத்துக்களைப் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பெண்ணின் வளையலுக்கு ஒரு குளம் கூட ‘பாதிக்கப்பட்டிருக்கின்றது’ என்ற இணையவாசி ஒருவரின் கிண்டலான கருத்து பதிவு பொதுமக்களை வெகுவாக ஈர்த்துள்ளது.