
ஜார்ஜ் டவுன், ஜூலை 18 – கடந்த திங்கட்கிழமை தஞ்சோங் டோகாங் கடற்கரையில் 1.4 மீட்டர் நீலத்திலான டால்பின் மீன் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து தனது துறையினருக்கு பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது என்று பினாங்கு மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.
மீன் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான தரவுகளையும் மாநில மீன்வளத் துறை பதிவு செய்துள்ளது என்று பினாங்கு மீன்வளத் துறை தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளது.
டால்பினின் சடலம் அருகிலுள்ள பகுதியில் புதைக்கப்பட்டது என்றும், மாநில கடல் நீரில் பாலூட்டிகள் இறப்பது தொடர்பான புகார்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவை என்றும் அறிவித்துள்ளனர்.