
கோத்தா பாரு, ஏப்ரல்-26- 2024 SPM தேர்வில் மிகச் சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்களில் ஏராளமானோர் மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுப்பார்கள் என சுகாதார அமைச்சு எதிர்பார்க்கிறது.
உள்நாட்டில் போதிய மருத்துவ நிபுணர்கள் இருப்பதை இதன் மூலம் உறுதிச் செய்ய முடியுமென, அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் கூறினார்.
STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் பாடங்களின் எதிர்கால முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு இப்போதே புரிய வைக்கப்பட வேண்டும்.
இது உள்நாட்டில் மருத்துவ நிபுணர்களுக்கு நிலவும் பற்றாக்குறைப் பிரச்னையைத் தீர்க்க உதவுமென்றார் அவர்.
நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட 2024 SPM தேர்வு முடிவுகள், 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிகச் சிறந்த அடைவுநிலையாகும்.
மொத்தம் 14,179 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A+, A, A- தேர்ச்சியைப் பெற்றுள்ளனர்.
முந்தைய ஆண்டில் 11,713 பேர் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் A-க்களைப் பெற்றிருந்தனர்