Latestமலேசியா

தன்னார்வாளர்கள் தடுத்துள்ளதை கண்டித்து அமெரிக்க தூதரகத்திற்கு முன் மறியல்

கோலாலம்பூர், அக் 2 – Global Sumud Flotilla கப்பல் மூலம் காஸாவுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை கொண்டுச் சென்ற தன்னார்வாளர்கள் மற்றும் ஆர்வாலர்களை இஸ்ரேலிய துருப்புக்கள் தடுத்துள்ளதை கண்டிக்கும் வகையில் இன்று மதியம் 12மணி முதல் அமெரிக்க தூதரகத்திற்கு முன் மறியல் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்தை நெருங்குவதை பாதுகாப்பு படையினர் தடுத்ததை காணமுடிந்ததோடு கடைசி நேரத்தில் இந்த மறியல் ஏற்பாடு செய்யப்பட்டதாக பாதுகாப்பு பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

தொடக்கத்தில் மாலை 4 மணியளவில் இந்த மறியல் ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் பின்னர் முன்கூட்டியே நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

மனிதாபிமான உதவிக் குழுவினருக்கு ஆதரவு தெரிவிக்கும் அதே வேளையில் மலேசியாவைச் சேர்ந்த 12 தன்னார்வாளர்கள் உட்பட Global Sumud Flotilla கப்பலைச் சேர்ந்த 201 பேர் தடுக்கப்பட்டுள்ளதால் அதனை கண்டிப்பதாக மறியலில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

பாலஸ்தீன மக்கள் மீது தனக்குள்ள மனிதாபிமான உணர்வின் காரணமாகவும் இந்த மறியலில் கலந்துகொண்டதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!