
கோலாலம்பூர், நவம்பர்-14,
தாம் சம்பந்தப்பட்ட அண்மைய சில சம்பவங்களில் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறி, ‘வைரல்’ இன்ஸ்பெக்டர் ஷீலா 3 போலீஸ் புகார்களை அளித்துள்ளார்.
முதல் புகார், அவர் கைதானதால் ஏற்பட்ட அதிருப்தியால் செய்யப்பட்டது.
இரண்டாவது புகார், போலீஸ் அதிகாரிகள் தன்னை ஒரு மூத்த அதிகாரியாக மதிக்கவில்லை என்றதால் ஏற்பட்ட அதிருப்தியாலும், மூன்றாவது புகார், சாலையோர உணவு விற்பனையாளர் மீது ஏற்பட்ட அதிருப்தியாலும் செய்யப்பட்டதாகும்.
இப்புகார்கள் பரிசீலிக்கப்பட்டதில், அவற்றில் குற்ற அம்சங்கள் எதுவும் இல்லை என வகைப்படுத்தப்பட்டதாக, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் கூறினார்.
முன்னதாக, தலைநகரில் உள்ள ஓர் உணவுக் கடையில் ஷீலா பிரச்னையில் ஈடுபட்டதாகக் கூறி 43 வினாடிகள் கொண்ட வீடியோ வைரலானது.
ஏற்கனவே கடந்த வாரம் உணவகமொன்றின் முன் போலீஸ்காரரை, கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி புதன்கிழமை அவர் கோலாலாம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
எனினும், ஷீலா ஷேரன் ஸ்டீவன் குமார் எனும் இயற்பெயரைக் கொண்ட 377 வயது ஷீலா அதனை அவர் மறுத்து விசாரணைக் கோரினார்.



