Latestமலேசியா

சிறுவன் கடத்தல் நேப்பாள ஆடவன் கைது

கோலாலம்பூர், அக் 28 – ராவாங்கின் கம்போங் பூங்கா ராயாவில் இரண்டு வயது சிறுவனை கடத்த முயன்ற நேப்பாள ஆடவன் கைது செய்யப்பட்டான். அந்த சந்தேக நபர் நேப்பாளத்தில் உள்ள சொந்த ஊரில் தனது இரு குழந்தைகளைத் விட்டுவிட்டு வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக விசாரணையில் கண்டறியப்பட்டதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent முகமட் ஹபிஸ் முகமட் நோர் (Mohd Hafiz Muhammad Nor ) தெரிவித்திருக்கிறார். அந்நபர் தனது குழந்தைகளையும் தனது மனைவியையும் கடைசியாக கடந்த ஆண்டு சந்தித்துள்ளான் என இன்று வெளியிட்ட அறிக்கையில் முகமட் ஹபிஸ் கூறியுள்ளார். கைதான நபர் சுங்கை பூலோ மருத்துவமனையின் மனநல மற்றும் மனநல ஆரோக்கியப் பிரிவுக்கு அனுப்பப்பட்டதால் மருத்துவமனையின் அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.

அந்த ஆடவர் நாட்டிற்குள் நுழைந்தபோது இருந்த நிலை மற்றும் அவரது பணி வருகை அனுமதி கார்டின் (PLKS) நம்பகத்தன்மை ஆராயப்படுவதாக முகமட் ஹபிஸ் தெரிவித்தார். இதற்கு முன்னதாக அந்த ஆடவர் துப்புரவுத் தொழிலாளிபோல் நடித்து , கம்போங் புங்கா ராயாவில் ஒரு சிறுவனை கடத்த முயன்றதாகக் கூறப்பட்டது. மதியம் மணி 12.40 அளவில் வீட்டின் அறையில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆடவன் குழந்தையுடன் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு முன் அவனது கையில் இருந்த குந்தையை உறவினர் ஒருவர் மீட்டார். கடத்தல் குற்றவியல் சட்டம் பிரிவு 363ன் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!