
சென்னை, டிச 4 – தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும் , AVM Studioவின் உரிமையாளருமான AVM சரவணன் இன்று அதிகாலையில் காலமானார். 1939 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 3 ஆம் தேதி பிறந்த AVM சரவணன் தனது 86 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய மறுநாளில் வயது மூப்பின் காரணமாக உடல் நலக் குறைவினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
AVM தயாரிப்பு நிறுவனம் AVM Studio ஆகியவற்றின் வெற்றிக்கு சரவணன் பெரும் பங்காற்றியுள்ளார். அந்த இரண்டு நிறுவனங்களையும் அவர்களின் தந்தையார் A.V. Meiyappan 1945 ஆம்ஆண்டு தோற்றுவித்தார்.
பல ஆண்டுகாலாமாக அந்த நிறுவனங்கள் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக திரைப்படங்களை தயாரிக்கும் தளமாக இருந்துள்ளன.
தனது தந்தைக்கு உதவியாக AVM studioவை கவனித்து வந்த சரவணன் பிறகு பல வெற்றிப் படங்களையும் தயாரித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முக்கிய தூண்களில் ஒருவராகவும் அவர் விளங்கி வந்தார்.
நானும் ஒரு பெண், முரட்டுக் காளை , சகல கலா வல்லவன், உயர்ந்த உள்ளம், மனிதன், சம்சாரம் அது மின்சாரம், மின்சார கனவு , சிவாஜி the boss, அயன் போன்ற வெற்றிப் படங்களையும் அவர் தயாரித்துள்ளார்.
அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக AVM studioவில் வைக்கப்பட்டுள்ளது .
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உட்பட தமிழ் திரையுலகின் நட்சத்திரங்கள் AVM சரவணன் மறைவுக்காக தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.



