
புத்ராஜெயா, ஜனவரி 6 – தற்போதைய ஒன்றுபட்ட அரசைக் கவிழ்த்து, தேர்தல் நடத்தாமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுதல் அல்லது ஆதரவை மாற்றுவதன் மூலம், புதிய அரசை அமைப்பது குறித்து எழுந்துள்ள யோசனைகளை UMNO தெளிவாக நிராகரிப்பதாக அதன் தலைவர் Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்துள்ளார்.
UMNO, நாடாளுமன்றத்தின் தற்போதைய காலம் முடியும் வரை ஒன்றுபட்ட அரசுடன் தொடரும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
துணை பிரதமராகவும் இருக்கும் Ahmad Zahid, UMNO மற்றும் Barisan Nasional கூட்டணி மீண்டும் எதிர்க்கட்சியுடன், குறிப்பாக PAS உடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற சில மாநில பிரதிநிதிகளின் கருத்துகள் தெரிவித்து வந்தனர். மேலும், சரியான நேரத்தில் தற்போதைய அரசிலிருந்து விலக வேண்டும் என்ற பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டதாக Zahid கூறியுள்ளார்.
இந்த அனைத்து கருத்துகளையும் விரிவாகக் கேட்டும் ஆராய்ந்தும் பார்த்ததாக அவர் தெரிவித்தார். இருப்பினும், கட்சியின் தொடக்கத்திலிருந்தே UMNO எடுத்துள்ள நிலைப்பாடு மாறவில்லை என்றும், தற்போதைய அரசை கவிழ்க்கும் எந்த முயற்சியிலும் UMNO ஈடுபடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
நேற்று நடைபெற்ற UMNO அரசியல் பணியகக் கூட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.



