Latestமலேசியா

தாமான் சுங்கை பீசியிலுள்ள மறுசுழற்சி பொருள் மையம் தீயில் அழிந்தது

கோலாலம்பூர், டிச 26 – தாமான் சுங்கை பீசியிலுள்ள (Taman Sungai Besi ) மறுசுழற்சி பொருள் சேகரிப்பு மையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து அந்த மையம் அழிந்தது.

இரண்டு மணி நேரத்திற்குப் பின் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இந்த தீவிபத்து குறித்து இரவு மணி 9.06 அளவில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் கோலாலம்பூர் நடவடிக்கை மையத்திற்கு அவசர அழைப்பு கிடைத்தாக நடவடிக்கை பிரிவின் முதிர்நிலை அதிகாரி காமண்டர் கமாருல்ஷமான் புசிருன் ( Kamarulzaman Busirun ) கூறினார்.

இதனைத் தொடர்ந்து பண்டார் துன் ரசாக் (Bandar Tun Razak) , செபூத்தே (Seputeh) , சுங்கை பீசி (Sungai Besi) மற்றும் ஹங் துவா (Hang Tuah) ஆகிய நான்கு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என 72 பேர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தீ விரைவாக பரவுவதைத் தடுக்க நுரையின் மூலம் தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு இரவு 10.20 மணியளவில் தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது.

அந்த மறுசுழற்சி பொருள் சேகரிப்பு மையம் தீயினால் 100 விழுக்காடு அழிந்ததாக கமாருல்ஷமான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!