பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 10 – Tumpat-லிலுள்ள Paija சட்டவிரோத தளத்தின் வாயிலாக, சீனியைத் தாய்லாந்திற்குக் கடத்த முயன்ற பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான இந்த பெண், கோலா திராங்கானுவிலுள்ள Op Taring Wawasan சோதனையின்போது பிடிபட்டுள்ளார்.
சந்தேக நபர் ஓட்டிச் சென்ற பெரோடுவா மைவியில் 140 கிலோ கிராம் சர்க்கரையை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
கைப்பற்றப்பட்ட வாகனத்தின் மதிப்பு 15,000 ரிங்கிட் எனவும், பறிமுத செய்த சர்க்கரையின் மதிப்பு 410 ரிங்கிட் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.