
நியூ யோர்க், செப்டம்பர்-30, விண்வெளியில் மாதக்கணக்கில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸை மீட்பதற்காக அனுப்பப்பட்ட இலோன் மாஸ்கின் Space X Crew Dragon விண்கலம், ஞாயிறன்று பாதுகாப்பாக அனைத்துலக விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது.
4 பேர் பயணிக்கக் கூடிய அதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்களை, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அனுப்பியுள்ளது.
இருவரும், சுனிதா வில்லியம்ஸுடன் விண்வெளியில் உள்ள புட்ச் வில்மோர் (Butch Wilmore)
உடன் இணைந்து விண்வெளியில் ஆய்வை மேற்கொள்வார்கள்.
ஆய்வுப் பணிகள் முடிந்து, சுனிதாவையும் வில்மோரையும் உடன் ஏற்றிக் கொண்டு அடுத்த பிப்ரவரியில் அவ்விண்கலம் பூமிக்கு திரும்புகின்றது.
இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் வெறும் ஒரு வார கால பயணமாக ஜூன் ஐந்தாம் தேதி புட்ச் வில்மோருடன் விண்வெளி பயணமானார்.
ஆனால் அவர்கள் சென்ற Starliner விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால், இருவரும் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
கோளாறை சரிசெய்ய மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால், இருவரையும் பூமிக்கு அழைத்து வரும் கடைசி கடைசியாக இந்த Space X நிறுவனத்திடம் நாசா பொறுப்பை ஒப்படைத்துள்ளது.