பாசீர் மாஸ், அக்டோபர்-22 – தாய்லாந்திலிருந்து படகுகளில் கடத்திக் கொண்டு வரப்பட்ட 44 ஆடுகள் கிளந்தான், பாசீர் மாஸில் பறிமுதல் செய்யப்பட்டன.
கம்போங் ரேப்பேக்கில் PGA எனப்படும் பொது நடவடிக்கைக் குழு பறிமுதல் செய்த அந்த ஆடுகளின் மொத்த மதிப்பு 55,000 ரிங்கிட் எனக் கூறப்படுகிறது.
Op Taring Wawasan சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையில் காணப்பட்ட லாரியைத் அதிகாரிகள் தடுத்து நிறுத்திய போது, அந்த ஆடுகடத்தல் அம்பலமானது.
மொத்தமாக 2,200 கிலோ கிராமுக்கும் அதிகமான எடையைக் கொண்ட 44 ஆடுகளும், தாய்லாந்தில் கடத்தப்பட்டு படகு வாயிலாக சுங்கை கோலோக் ஆற்றை கடந்து இங்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
மலேசியக் கரையோரம் வந்ததும் புதர்பகுதியில் மறைத்து வைத்து, உள்ளூர் சந்தைகளுக்கு விற்கப்படுவதற்காக அவை லாரியில் ஏற்றப்பட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
லாரியிலிருந்த இரு ஆடவர்கள் விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் ஆடுகள் தலா 1,000 ரிங்கிட்டிலிருந்து 1,500 ரிங்கிட் வரை விற்கப்படும் நிலையில், தாய்லாந்து ஆடுகளின் விலை சுமார் 680 ரிங்கிட் மட்டுமே என்பதால், அவற்றுக்கு கிராக்கி ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.