
புக்கிட் காயு ஹீத்தாம், செப்டம்பர்-2 – தாய்லாந்தில் உல்லாச விடுமுறை முடிந்து திரும்பிய 23 பேர் தேசியப் போதைப்பொருள் தடுப்பு நிறுவனமான AADK-வால் கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்களில் ஜித்ராவைச் சேர்ந்த 6-ஆம் படிவ மாணவி ஒருவரும் அடங்குவார்.
புக்கிட் காயு ஹூத்தாம் சுங்க, குடிநுழைவு, தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்புச் சோதனை சாவடியில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணி தொடக்கம் நேற்று மதியம் 1 மணி வரை மேற்கொள்ளப்பட்ட Op Merdeka 2025 சோதனையில் அவர்கள் சிக்கினர்.
31 பேர் சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அந்த 18 வயது மாணவி அவரின் 25 வயது காதலர் உட்பட 23 பேர் பல்வேறு போதைப்பொருட்களை உட்கொண்டது உறுதிச் செய்யப்பட்டது.
அம்மாணவி உட்பட பலர் Dannok-கில் கேளிக்கை மையத்தில் உல்லாசமாக இருந்த போது போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது.
மேல் விசாரணைக்காகக் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டனர்.