பேங்கோக், அக்டோபர்-10 – தாய்லாந்தைச் சேர்ந்த 29 வயது ஆடவர், பல்வகை உணவுகளை சுயமாக எடுத்து சாப்பிடும் buffet வகை உணவகத்தில் தொடர்ந்தாற்போல் 11 மணி நேரங்கள் செலவிட்டு, தனது சொந்த சாதனையையே முறியடித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட உணவகம் அறிவித்திருந்த நேர வரம்பற்ற விலைக் கழிவுச் சலுகையை (unlimited time promotion), ஓய்வெடுக்காமல் தூங்காமல் அவர் முழுமையாக அனுபவித்துள்ளார்.
Oshinei Khon Kaen உணவகம் தனது முகநூல் பக்கத்தில் அத்தகவலைப் பகிர்ந்துள்ளது.
பங்க் (Bank) என்ற அவ்வாடவர் காலை 11.03 மணிக்கு சாப்பிடத் தொடங்கி, மொத்தமாக 10 மணி 57 வினாடிகளைச் செலவிட்டுள்ளார்.
ஒவ்வொரு நாளும் கடை அடைப்பு இரவு 10 மணிக்கு என்பதால், இப்புதியச் சாதனையை இனி முறியடிப்பது கடினமென அவ்வுணவகம் தெரிவித்தது.
அந்த buffet உணவகம் திறக்கப்பட்டதிலிருந்து அதன் விசுவாசமான வாடிக்கையாளராக உள்ள பங்க், உண்மையில் சாதனைப் படைப்பது தனது திட்டமே அல்ல என்றார்.
காலை 6 மணிக்கு வீட்டில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது நல்ல பசி; ஆனால் சாப்பிட எதுவுமே இல்லாததால் நேராக அங்கு சென்றேன்.
அப்போது அந்த கழிவுச் சலுகையைப் பற்றி கேள்வி பட்டேன், அவ்வளவு தான் என்கிறார் சிரித்துகொண்டே.
எங்கள் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 4 மணி நேரங்கள் செலவிடுவார்கள்.
ஆனால் யாரும் நெருங்க முடியாத அளவுக்கு பங்க் புதியச் சாதனைப் படைத்திருப்பதாக Oshinei Khon Kaen கூறியது.