Latestஉலகம்மலேசியா

தாஜ்மஹாலில் எடுத்த குடும்பப் புகைப்படத்தை X தளத்தில் பகிர்ந்த ஜேடி வான்ஸ்; அதற்கு இலோன் மாஸ்க்கின் பதில் வைரல்

ஆக்ரா, ஏப்ரல்-27,

4 நாள் பயணமாக இந்தியா சென்ற அமெரிக்கத் துணையதிபர் ஜேடி வான்ஸ், தனது இந்திய வம்சாவளி துணைவியார் உஷா மற்றும் 3 பிள்ளைகளுடன் தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தார்.

தாஜ்மஹால் முன்புறம் குடும்பமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் X தளத்திலும் பகிர்ந்துள்ளார்.

தாஜ்மஹால் அழகான வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும்; உண்மையான அன்பின் அடையாளம் என்றும் அவர் புகழ்ந்தார்.

அவரின் பதிவு வைரலாகி வரும் நிலையில், X தள உரிமையாளரும் உலக மகா கோடீஸ்வரருமான இலோன் மாஸ்க்கும் அதை ‘லைக்’ செய்து கருத்து பதிவிட்டுள்ளார்.

“இது உலக அதிசயங்களிலேயே மிகவும் அழகான ஒன்றாயிற்றே!” என இலோன் மாஸ்க் ‘ரிப்ளை’ செய்திருப்பதும் வைரலாகி வருகிறது.

உயரடுக்கு பாதுகாப்போடு ஆக்ரா சென்ற வான்ஸ் – உஷா தம்பதியர் சுமார் 1 மணி நேரம் தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தனர்.

அமெரிக்கத் துணையதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு வான்ஸ் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!