
கோலாலம்பூர், பிப்ரவரி-22 – Panasonic Malaysia நிறுவனம், “Panasonic மின்னணுக் கழிவுகள் மறு சுழற்சி இயக்கத்தைத்” தொடங்கியுள்ளது.
மலேசியாவின் முன்னணி மின்னணுக் கழிவுகள் மறுசுழற்சி அமைப்பான ERTH-யுடன் இணைந்து இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இப்பிரச்சார இயக்கம், நாட்டில் அதிகரித்து வரும் மின்னணுக் கழிவுகளின் பிரச்சினையைக் களையைப் பொறுப்பான மறுசுழற்சி நடைமுறைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் வரும் ஜூன் 30 வரை நடைபெறும் இவ்வியக்கத்தில் பங்கேற்பவர்களுக்கு, 50 ரிங்கிட் மதிப்புள்ள மின் பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும்.
ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இணையம் வாயிலாக விண்ணப்ப படிவங்களைப் பூர்த்திச் செய்யலாம்.
Wira ERTH படையினர் உங்களின் மின்னணுக் கழிவுகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வர்.
ஒரு தடவைக்கு, குறைந்தது 3 மின்னணுக் கழிவுப் பொருட்கள் இருக்க வேண்டும்.
இப்பிரச்சாரத்தின் வழி, பொறுப்பற்ற முறையில் மின் கழிவுகளை அகற்றுவதன் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என Panasonic Malaysia நம்புகிறது.
இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் சுகாதார அபாயங்களையும் குறைக்க முடியும்.
இந்தப் பிரச்சாரம், ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை ஆதரிக்கும் மற்றும் சமூகத்தின் மத்தியில் பொறுப்பான மறுசுழற்சி கலாச்சாரத்தை வளர்க்கும் Panasonic Malaysia நிறுவனத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என, அதன் நிர்வாக இயக்குநர் Keisuke Nishida கூறினார்.
ERTH-யுடனான இந்த ஒத்துழைப்பு, மின் கழிவின் எதிர்மறையான தாக்கத்தை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த எதிர்காலத்திற்கு பங்களிக்கும் எனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இது குறித்த மேல் தகவல்களுக்கு Panasonic Malaysia இணையத் தளத்தை வலம் வரலாம்.