
கோலாலம்பூர், ஜூலை 25 – மலேசியா, தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் மிக உயர்ந்த அளவிலான சுய கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையில் பதட்டங்களைத் தணிக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தபட்டுள்ளது.
ஆசிய நாடுகளின் ஒற்றுமையின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையை பேச்சுவார்த்தையின் வழி தீர்க்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசன் கூறியுள்ளார்.
நேற்று, எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்ளும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த மே மாதம் கம்போடிய சிப்பாயைக் கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, இரு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.