
காலையில் தனது காரை பார்க் செய்துவிட்டச் சென்ற போது சுற்றிலும் கார்கள் இருந்த நிலையில், மாலையில் வாகனத்தை எடுக்க வந்தபோது, கார் நிறுத்துமிடம் உணவகமாக மாறியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் பெண் ஒருவர்.
இச்சம்பவம் ஜோகூர் பாருவில் ஒரு மாமாக் உணவகம் முன்புறம் நிகழ்ந்துள்ளது. தனது காரை சுற்றிலும் மேசைகள் போடப்பட்டு, வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டிருந்ததால் தனது காரை வெளியே எடுக்க முடியாமல் தவித்துள்ளார் அப்பெண். அந்த சூழலை விவரிக்கும் படங்களையும் அவர் தனது டிக் டோக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு, வலைத்தளவாசிகளின் பரிதாபத்தைப் பெற்றதோடு சிலர் நகைச்சுவையான கருத்துகளையும் பதிவிட்டிருந்தனர்.