Latest
திடீர் நீர்பெருக்கில் கிள்ளான் ஆற்றில் அடித்துச் சென்ற வாகனம் கண்டுபிடிப்பு

கோலாலாம்பூர், நவம்பர் 19-நேற்று முன்தினம் கடுமையான மழையால் ஏற்பட்ட திடீர் நீர்பெருக்கில் Pintasan Saloma அருகே கிள்ளான் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு சக்கர வாகனம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இன்று காலை மீண்டும் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள், SAR குழுவினர் வாகனத்தை கண்டுபிடித்தனர்.
தேடுதல் மையத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அது கண்டுபிடிக்கப்பட்டு, DBKL கிரேன் உதவியுடன் ஆற்றிலிருந்து தூக்கப்பட்டது.
மீட்பு குழுவினர் நேற்று 20 கிலோ மீட்டர் நீளத்தில் ட்ரோன், படகு மற்றும் K-9 மோப்ப நாய்கள் மூலம் தேடினர்.
இந்நிலையில், சம்பவத்தில் காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



