
கோலாலம்பூர், பிப் 24 – Titiwangsa LRT ரயில் நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு கண்பார்வையற்றவர் என நம்பப்படும் ஓர் ஆடவர் தண்டவாளத்தில் விழுந்து இரயில் மோதி உயிரிழந்த விவகாரத்தில் platform ஊடுருவல் அவசர நிறுத்தம் PIES அமைப்பு ,செயல்படத் தவறியதாக கூறப்படுவதை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் மறுத்துள்ளார்.
அவசர நிறுத்தம் PIES அமைப்பு, வழக்கம் போல் இயங்கியது. ஆனால் LRT ரயில் ஏற்கனவே அதன் இலக்கை அடைந்துவிட்டதால், சம்பவத்தைத் தவிர்க்க முடியவில்லையென அவர் தெரிவித்தார்.
சில நேரங்களில் ஒரு பொருள் (தடங்களில்) விழுந்தால், PIES அமைப்பு முறை இயல்பாகவே நிறுத்தப்படும் . ஆனால் ரயில் ஏற்கனவே நிலையத்திற்கு வந்துவிட்டது, எனவே உடனடியாக PIES அமைப்பு முறையை நிறுத்துவதற்கு நேரம் இல்லையென அந்தோனி லோக் விவரித்தார்.
தண்டவாளத்தில் ஒரு பொருள் கீழே விழுவதை கண்டறிந்தால் பிளாட்பாரத்தை நெருங்கும் ரயிலை PIES முறை உடனடியாக நிறுத்துகிறது என இன்று Ipoh BAS.MY யை அறிமுகப்படுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது அந்தோனி லோக் இத்தகவலை வெளியிட்டார்.
இச்சம்பவம் குறித்து இன்னமும் விசாரணை நடைபெற்று வருகிறது.