Latestமலேசியா

திரிசூல அவமதிப்பு: தமிம் டாஹ்ரியை இன்னும் கைதுச் செய்யாதது ஏன்? ராயர் கேள்வி

கோலாலாம்பூர், மார்ச்-12 – இந்துக்களின் புனிதச் சின்னமான திரிசூலத்தை அவமதித்த புகாரில் சிக்கியுள்ள தமிம் டாஹ்ரி இன்னும் கைது செய்யப்படாதது குறித்து, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

4 நாட்களுக்கு முன், கெடாம் லங்காவியில் தமிம் திரிசூலத்தை காலால் மிதித்த வீடியோ வைரலானது; இதையடுத்து நாடு முழுவதும் பல போலீஸ் புகார்கள் அளிக்கப்பட்டன..இன்னும் அளிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், தமிழ் இன்னும் கைதுச் செய்யப்படாமலிருப்பது வியப்பாக இருப்பதாகவும், இது குறித்து தேசியப் போலீஸ் படைத் தலைவரும் உள்துறை அமைச்சரும் விளக்க வேண்டுமென்றும் ராயர் வலியுறுத்தினார்.

பிற மத அவமதிப்பு சம்பவங்கள் விரைவாக விசாரிக்கப்பட்டதை சுட்டிக் காட்டிய ராயர், தாமதம் அநியாயமான பார்வையை உருவாக்கும் என எச்சரித்தார்.

அது ஒரு மதச் சின்னம் என்பதை அறியாமல், வெறும் துருப்பிடித்த பழைய இரும்பு என நினைத்ததாக தமிம் விளக்கம் கூறியுள்ளார்.

ஆனால், இந்திய சமூக இயக்கவாதிகள், அது வெறும் இரும்பு அல்ல என்றும் மாறாக லங்காவி ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்துக்குச் சொந்தமான திரிசூலம் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!