
கூலாய், செப்டம்பர்-5 – ஜோகூர் கூலாயில் ஒரு பள்ளிவாசலுக்குச் சொந்தமான அமரர் ஊர்தியை திருடிய ஆடவன், தப்பிக்கும் முயற்சியில் விபத்தில் சிக்கியதால் போலீஸிடம் பிடிபட்டான்.
நேற்று அதிகாலை 2.30 மணிக்கு அந்த வேன், ஸ்கூடாய் நெடுஞ்சாலையில் ஒரு லாரியுடன் மோதி நசுங்கியதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்தது.
சென்று பார்த்த போது
Kampung Sungai Sayong, Nurul Haq பள்ளிவாசலிலிருந்து
நள்ளிரவில் காணாமல் போன அமரர் ஊர்தியே அதுவென தெரிய வந்தது.
இதையடுத்து 21 வயது இளைஞன் கைதானான்.
அந்த Toyota Hiace
வேன் மோசமாக நசுங்கியதில் அவனது முகத்திலும் கால்களிலும் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.
சந்தேக தபருக்கு 14 குற்றப்பதிவுகள் இருப்பதை கண்டறிந்த போலீஸ், இந்த வேன் திருட்டில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் மேலும் மூவருக்கு வலை வீசியுள்ளது.