Latestஇந்தியாசினிமா

திருமண முறிவு குறித்து கட்டுக்கதைகள்; வீடியோக்களை நீக்காவிட்டால் வழக்கு; ஏ.ஆர். ரஹ்மான் நோட்டீஸ்

மும்பை, நவம்பர்-24, தனது திருமண வாழ்வு முறிவு குறித்துச் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள அவதூறான வீடியோக்கள், ‘கற்பனை’ பேட்டிகள், கட்டுரைகள் போன்றவற்றை உடனடியாக நீக்கக் கோரி, சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் YouTube பக்கங்களுக்கு, ஏ.ஆர். ரஹ்மான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

உண்மைக்கும் புறம்பாகவும் சிலர் கற்பனையில் அளித்த பேட்டிகளும் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

இது தனது கட்சிக்காரருக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக ரஹ்மானின் வழக்கறிஞர் கூறினார்.

எனவே, அவற்றை உடனடியாக நீக்காவிட்டால், 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வகைச் செய்யும் சட்டப் பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்படுமென, அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதியர் தங்களின் 29 ஆண்டு காலத் திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு பிரிவதாக அண்மையில் அறிவித்தனர்.

இஃது இரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், YouTube பக்கங்கள் வழக்கம் போல் அவர்களின் பிரிவுக்கு என்ன காரணமாக இருக்குமென ஆராயத் தொடங்கி விட்டன.

பலரையும் பேட்டியெடுத்து நிலைமையை மோசமாக்கி வருவதாகச் சமூக வலைத்தளவாசிகளே குறைக் கூறியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!