Latestமலேசியா

திரெங்கானு கடற்கரையோரம் ஒதுங்கிய எரிந்த நிலையிலான300 டன் மர்மக் கப்பல்

குவந்தான், ஆக 15 – எரிந்த அறிகுறிக்கான அடையாளத்தைக் கொண்ட 300 டன் எடையுள்ள கப்பல் திரெங்கானு எண்ணெய் கிணறுப் பகுதிக்கு அருகே மிதந்து கொண்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது .

திரெங்கானு Semangkok A எண்ணெய்க் கிணறு பகுதியிலிருந்து 4 கடல் மைல் தூரத்திற்கு கிழக்கே, அக்கப்பல் நேற்று மாலை மணி 4.45 அளவில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக மலேசிய கடல் அமலாக்க நிறுவனத்தின் இயக்குநர் Admiral Mazlan Mat Rejab  தெரிவித்தார்.

அந்த கப்பல் எண்ணெய்க் கிணறு பகுதியை கடந்து சென்றபோது கண்டறிப்பட்டது.

அப்பகுதியில் உள்ள மற்ற எண்ணெய் கிணறுகளுடன் மோதும் அபாயத்தை இந்த நிலைமை ஏற்படுத்தியதாக Mazlan கூறினார்.

தகவல் கிடைக்கப்பெற்றதும் சிறப்பு நடவடிக்கை மற்றும் மீட்புக் குழு நேற்று மாலை 6.58 மணிக்கு கப்பலை அணுகி அதில் ஒரு இழுவை கயிற்றை இணைக்க அனுப்பப்பட்டது.

அக்கப்பல் நாளை திரெங்கானுவில் உள்ள Kemaman துறைமுகப் பகுதிக்கு கொண்டுவரப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது . பாதிக்கப்பட்டவர்களின் புகார் உட்பட விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அதோடு அக்கப்பலின் அடையாளம் மற்றும் உரிமையாளரைக் கண்டறிய விசாரணையும் மேற்கொள்ளப்படும் என Mazlan தெரிவித்தார்.
ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று ஜோகூரில் உள்ள  Tanjung Sedili கடல் பகுதியில் ஒரு டேங்கர் எரிந்த சம்பவத்துடன் அந்த கப்பல் தொடர்புடையது என்பதற்கான சாத்தியக்கூறுகளை மலேசிய கடல் அமலாக்க நிறுவனம் நிராகரிக்கவில்லை.

இந்த சம்பவத்தில், இந்தோனேசிய பணியாளர் ஒருவர் இறந்ததோடு மேலும் நால்வர் காயம் அடைந்தனர் என கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!