கோலாத்திரெங்கானு, நவ 8 – வர்த்தகத் தொகுதிகள் புதுப்பிக்கப்படும் கடைக்கு 17 வயது மாணவர் ஒருவர் கட்டுமான பொருட்களை கொண்டு சென்றபோது அப்பொருட்கள் அவர் மீது விழுந்ததில் மரணம் அடைந்தார். பகுதி நேரமாகப் பணிபுரிந்த அந்த மாணவர் மாற்றி அமைக்கப்பட்ட தள்ளுவண்டியில் தனது தலைக்கு மேல் கட்டுமான பொருட்களை கொண்டுச் சென்றபோது நேற்று மாலை மணி 4.30 அளவில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக Dosh எனப்படும் Terengganu தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அந்த தள்ளுவண்டி உடைந்து கட்டுமானப் பொருட்கள் அம்மாணவர் மீது விழுந்ததில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே அம்மாணவர் இறந்தார். மேல் விசாரணையை நடத்துவதற்காக Dosh அதிகாரிகள் நேற்று அந்த வர்த்தக வளாகத்திற்கு சென்றனர். பொருட்களை இறக்குவதற்கும் அப்புறப்படுத்துவதற்கும் பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்யத் தவறியதற்காக குத்தகையாளருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.