Latestமலேசியா

தீயணைப்பு வாகனத்திற்கு தடையாக இருந்த லோரி ஒட்டுநருக்கு அபராதம்

கம்பார், ஜூலை 31 – கம்பாரில் எச்சரிக்கை ஒலியுடன் அவசரமாக சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு வாகனத்திற்கு வழிவிடாமல் சென்ற லோரி ஓட்டுனரின் நடவடிக்கையினால் தீயணைப்பு வீரர்கள் பெரும் பரபரப்புக்கு உள்ளாகினர்.

இச்சம்பவம் வைரலானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட லோரி ஓட்டுநருக்கு எதிராக அபராதத்திற்கான குற்றப்பதிவை போலீசார் வெளியிட்டனர்.

மேலும் லோரி ஓட்டுனநரின் இந்த நடவடிக்கை வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிருத்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபத்து மற்றும் அவசரப் பணிகளின்போது மீட்பு நடவடிக்கைகளுக்கு சென்ற தீயணைப்பு வாகனத்திற்கு வழிவிடத் தவறியதற்காக, 1959 ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் பிரிவு 9(2)இன் கீழ் லோரி ஓட்டுநருக்கு எதிராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Mohamad Nazri Daud தெரிவித்தார்.

ஜன்னல்கள் முழுமையாக மூடப்பட்டிருந்த நிலையில் அதிகமான லோரி இயந்திரத்தின் சத்தம் காரணமாக, சம்பந்தப்பட்ட லோரியின் ஓட்டுநருக்கு தீயணைப்பு இயந்திரம் இருப்பது தெரியாது என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

எனினும் தீயணைப்பு வண்டிக்கு வழிவிடமால் சென்ற லோரி தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து, கம்பார் மாவட்ட போலீஸ் தலைமையகம் விசாரணைக்கு உதவ லோரி ஓட்டுநர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தது என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் Nazri தெரிவித்தார்.

சைரன்கள் அல்லது எச்சரிக்கை விளக்குகள் பயன்படுத்தப்படும்போது ஆம்புலன்ஸ்கள், போலீஸ்துறை மற்றும் தீயணைப்பு படைகள் போன்ற அவசரகால வாகனங்களுக்கு வழிவிடுவது சாலைப் பயனர்களின் பொறுப்பு என்று அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!