
கோத்தா பாரு, ஜனவரி 26 – நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த 89 வயதுடைய Fatimah Mat Said எனும் மாது, பஹாங் அரண்மனையின் முன்னாள் சமையல்காரர் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அனைவராலும் அன்புடன் “Mek” என அழைக்கப்பட்ட அவர், தனது சமையல் சுவையால் குடும்பத்தை ஒன்றிணைத்தவர்.
அரண்மனையில் பணியாற்றிய காலத்தில் அவர் செய்த ‘கோழி குர்மா’ அவரது அடையாள உணவாக இருந்தது. ஹரிராயா உள்ளிட்ட பண்டிகைகளில், 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள் அவரது வீட்டில் கூடி அந்த உணவை சுவைப்பது வழக்கம்.
அம்மூதாட்டியின் மூத்த பேரன் கூறுகையில் “அந்த சுவையும், Mek-கின் அன்பும் மறக்க முடியாதவை,” என தெரிவித்தார். தமது பாட்டியின் தீவிபத்து குறித்த தகவலை அவர் வேலை இடத்தில் இருந்தபோது அறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
உயிரிழந்த அப்பெண்ணின் உடல் இன்று காலை ஜாலான் மெர்பாவ் பகுதியில் உள்ள கிராம மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. Jalan Tok Guru-விலுள்ள அவரது மர வீடு தீவிபத்தில் முற்றிலும் சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வீடு சாம்பலானாலும், Mek-கின் விருந்தோம்பலும் பண்டிகை நினைவுகளும் குடும்பத்தினரின் மனங்களில் என்றும் வாழும் என உறவினர்கள் தெரிவித்தனர்.



