
கோலாலம்பூர், ஜன 7 – துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கு 100 வயதுக்கு மேல் இருப்பதால், அவரது இடுப்பு எலும்பு முறிந்ததை குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியிருப்பதாக அவரது மகன் Datuk Seri Mukhriz Mahathir கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வீட்டின் balconyயில் உடற்பயிற்சி செய்யும் போது தவறி விழுந்து இடுப்பு முறிந்ததாக இன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் முக்ரிஸ் தெரிவித்தார்.
தனது தந்தை இரண்டு முதல் மூன்று வாரங்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்வது புத்திசாலித்தனமான வழி அல்ல என்பதால் அவர் குணமடைய சிறிது காலம் தேவைப்படும் .
அதோடு குடும்பத்திற்கு வாழ்த்துக்களை குறுஞ்செய்தி மூலம் அனுப்பிய அனைவருக்கும் முக்ரிஸ் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.



